மெல்ல உதித்த சூரியன்; வீழ்த்த மறந்த தென் ஆப்பரிக்கா

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (13:00 IST)
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் விளாசி அசத்தினார்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது சதம் இந்திய அணிக்கு 300 ரன்களுக்கு குவிக்க உதவியது. டுமினி சிறப்பாக பந்து வீசி தவான், ராகானே ஆகியோரை வெளியேற்றினார். தவான் 76 ரன்களில் வெளியேறினார்.
 
தென் ஆப்பரிக்க அணி பந்து வீச்சாளர்கள் கோலியை கட்டுப்படுத்தினர். ஆனால் வீழ்த்த முடியவில்லை. ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி கடைசி நேரத்தில் ரன்கள் குவிப்பத்தில் கவணம் செலுத்தினார். இந்திய அணியை 300 ரன்கள் கடக்க உதவினார். 
 
ராகானே, தோனி, பாண்டியா, ஜாதவ் ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறிய நிலையில் புவனேஷ்வர் குமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்