வெறி கோலியின் தெறி சதம்; 300 ரன்களை கடந்த இந்தியா

புதன், 7 பிப்ரவரி 2018 (20:23 IST)
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்து தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்துள்ளது.
 
ரோகித் வந்த வேகத்தில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி சதம் விளாசி 160 ரன்கள் குவித்தார். தவான் அரைசதம் விளாசி 76 ரன்கள் குவித்தார். ரகானே, தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.
 
கடைசி நேரத்தில் புவனேஷ்வர்குமாரின் ஒத்துழைப்புடன்  கோலி இந்திய அணியை 300 ரன்கள் கடக்க உதவினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்