ஜெர்மனியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார்.
ஜெர்மனியில் உள்ள சுஹல் நகரில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடந்த ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், அவர் இப்போட்டியில் 243.7 புள்ளிகள் பெற்று சீனாவின் ஜிஹாவின் உலக சாதனை முறையடித்துள்ளார்.
சவுரவ் சவுத்ரியுடன் இந்த ஆட்டத்தில் கலந்துகொண்ட லிம் ஹோஜின் ( கொரியா ) 239.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும், வாங் ஜிஹாவ் ( சீனா ) 218.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா எட்டு தங்கம், 1 வெள்ளி, ஐந்து வெண்கலம் உள்பட 14 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.