டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; நீண்ட நேர போரட்டம்! – வெற்றியை தவறவிட்ட தமிழக வீரர்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (12:04 IST)
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சத்யன் ஞானசேகரன் கலந்து கொண்டார். ஹாங்காங் வீரருடன் நடைபெற்ற 7 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டியில் சத்யன் 3-4 என்ற கணக்கில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்