ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:28 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் வர்ணனையின் போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தூக்கியும் மற்ற அணிகளை மட்டம் தட்டி பேசுவதாக மஞ்சரேக்கர் மேல் குற்றச்சாட்டு உண்டு. மேலும் அவர் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என சொல்லி கேலி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதையடுத்து இப்போது அஸ்வினையும் அவர் விமர்சனம் செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் டிவிட்டரில் ஒரு நபர் பகிர்ந்த தகவலில் சஞ்சய் மஞ்சரேக்கர் உடனான தனிப்பட்ட உரையாடலில் ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது எனக் கூறியுள்ளார். அதில் ‘ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் நான் சொன்ன pits and pieces என்ற வார்த்தைய அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் அவர் என்னைப் பற்றி சொன்ன verbal diaheria என்ற வார்த்தையைக் கூட அவருக்கு வேறு யாராவது ஒருவர்தான் சொல்லி தந்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதனால் மீண்டும் ரசிகர்கள் அவரைக் கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்