அப்படி சொல்லாதட ச்சாரி… மனசெல்லாம் வலிக்றது- சஞ்சய் மஞ்சரேக்கரை பங்கமாக கலாய்த்த அஸ்வின்!

செவ்வாய், 8 ஜூன் 2021 (07:48 IST)
ரவிச்சந்திரன் அஸ்வின் எல்லா காலத்துக்குமான சிறந்த வீரர் இல்லை எனக் கூறிய சஞ்சய் மஞ்சரேக்கரை மீம் ஒன்றின் மூலம் கலாய்த்துள்ளார் அஸ்வின்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார்.

இதுபோன்ற கருத்துகளை அவர் அடிக்கடி கூறி வருவதால் அவரின் இந்த கருத்து பலராலும் கேலி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மீம் ஒன்றின் மூலம் நக்கலாக பதிலளித்துள்ளார் அஸ்வின். அந்நியன் படத்தில் விக்ரம் விவேக்கிடம் ‘அப்படி சொல்லாதடா சாரி… மனசு வலிக்கிறது’ என்று அப்பாவியாக கூறுவதை மீமாக பகிர்ந்துள்ளார். அஸ்வினின் இந்த டிவீட் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்