வருங்காலத்தில் சி.எஸ்.கே-வின் கேப்டனாக சாம் கரன் உயரலாம்: சொன்னது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:59 IST)
சிஎஸ்கே வின் சுட்டிக்குழந்தை என்று பெருமைப்படும் அளவுக்கு சாம் கர்ரன் கடந்த காலங்களில் சூப்பராக விளையாடினார் என்பதும் இந்த ஆண்டு அவர் ஏலத்திற்கு வர இருக்கும் நிலையில் சிஎஸ்கே மீண்டும் அவரை எடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா சாம் கர்ரன் குறித்து கூறிய போது சென்னை அணி சாம் கர்ரனை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக சேப்பாக்கம் பிட்சுகளில் அவரது பந்துவீச்சு பெரிய அளவில் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் அவரிடம் நல்ல தலைமைப் பண்பு உள்ளது என்றும் வருங்காலத்தில் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக உயரலாம் என்று குறிப்பிட்டு உள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்