ஒரு சிக்ஸ் அடிச்சா போதும்! வரலாறே மாறும்! – ஹிட்மேனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (14:37 IST)
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே நாளை நடைபெற இருக்கும் டி20 தொடரை ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் வேளையில், ரோகித் ஷர்மா படைக்க போகும் சாதனைக்காகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் ஹிட்மேன் என ரசிகர்களால் புகழப்படும் ரோகித் ஷர்மா சர்வதேச போட்டிகளில் இதுவரை அடித்துள்ள சிக்ஸர்கள் 399. நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஒரே ஒரு சிக்ஸ் அடித்தால் போதும், அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரோகித் ஷர்மா படைப்பார்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல் 534 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அஃப்ரிதி 476 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நாளை ரோகித் ஷர்மா அடிக்கப்போகும் ஒரு சிக்ஸர் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்த இருப்பதால் ரசிகர்கள் நாளைய ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்