ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 3 தங்கம் வென்று இந்திய வீரர் சாதனை

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (10:44 IST)
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 3 தங்கம் வென்று இந்திய வீரர் சாதனை
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 தங்கப்பதக்கம் பெற்று இந்திய வீரர் வரலாற்று சாதனை செய்துள்ளார். 
 
மங்கோலியாவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது
 
இந்த தொடரில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரரான ரகத் கல்சான் என்ற வீரரை 12-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் ரவி தாஹியா தோற்கடித்தார்.
 
இதனையடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை ரவி தாஹியா செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்