தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா சரிவில் இருந்து மீண்டு வருகின்றது.
ஜோகன்னஸ்பார்க் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ராகுல் 50 ரன்களும் அஸ்வின் 46 ரன்கள் எடுத்து உள்ளனர். இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி ஷர்துல் தாக்கூரின் அபாரமான பந்துவீச்சால் 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நேற்று இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்து தடுமாறியது. இந்நிலையில் மோசமான பார்மில் இருக்கும் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் நிலைத்து நின்று துரிதமான அரைசதத்தை அடித்தனர். சிறப்பாக விளையாடிய ரஹானே 58 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே புஜாராவும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போது இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 163 ரன்கள் சேர்த்து, 136 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.