உலகக்கோப்பையில் தோல்வி: இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:32 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவை காய்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
 
இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் உலக கோப்பை போட்டியில் 152/0 மற்றும் 170/0 ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றன என்று பதிவு செய்துள்ளார் 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அந்த இரண்டு அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதுகின்றன என்ற அர்த்தத்தில் இந்தியாவை கலாய்க்கும் வகையில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஆகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்