மைசூரு - சென்னை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

வெள்ளி, 11 நவம்பர் 2022 (12:04 IST)
இந்தியாவில் ஏற்கனவே நான்கு அதிவேக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது 5வது வந்தே பாரத் ரயிலாக மைசூர் முதல் சென்னை வரையிலான ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 
 
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் வரையிலான மைசூர் - சென்னை விரைவு ரயிலை இன்று பிரதமர் மோடி பெங்களூரில் கொடியசைத்து துவக்கி வைத்தார் 
இந்த ரயில் மைசூரில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை வரவிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடைகிறது என்றும் அதே போல் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் இருந்து மைசூருக்கு இந்த ரயிலில் பயணம் செய்ய 6.40 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை-மைசூர் பயண டிக்கெட் ரூ.1200 ஆகும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்