உலக கோப்பை கிரிக்கெட் உலகமெங்கும் பரவலான கொண்டாட்டத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தேர்வாவது உறுதியாகிவிட்டது. தரவரிசயில் அடுத்து இருக்கும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையேயான ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் ஹுசைன் “பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி? நடக்கபோகும் இங்கிலாந்து, இந்தியா ஆட்டத்தில் உங்கள் ஆதரவு யாருக்கு?” என கேட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் “இந்தியாவுக்குதான் எங்கள் ஆதரவு” என பதிவிட்டுள்ளனர். இது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தின்போது இரு நாட்டு ரசிகர்களும் எந்தளவுக்கு உக்கிரமாக இருப்பார்கள் என்பது உலகம் அறிந்ததே.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடிய ஆட்டத்தில் இந்திய ரசிகர் ஒருவர் “சகோதர பாகிஸ்தான்” என பேனர் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இரண்டு நாட்டு ரசிகர்களும் “எங்களுக்குள்ள மேட்ச் நடந்தா அடிச்சிக்குவோம். ஆனா அடுத்த நாட்டு அணிகளிடம் விட்டு கொடுக்க மாட்டோம்” என சொல்லாமல் நிரூபித்திருக்கின்றனர்.
Question to all Pakistan fans .. England vs INDIA .. Sunday .. who you supporting ?