கொரோனா பாதித்த அஃப்ரிடிக்கு மகிழ்ச்சியான செய்தி!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (08:59 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷாகித் அஃப்ரிடியின் மனைவி மற்றும் மகள் இருவரும் அதில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானில் மிகவேகமாக பரவி வந்த நிலையில் அந்த நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷாகித் அப்ரிடி அவரது மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இதில் அப்ரிடி முதலிலேயே குணமாகிவிட்ட நிலையில் தற்போது அவரது மனைவியும் மகளும் பூரண குணமாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்ரிடி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனது மனைவி மற்றும் மகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. உங்கள் பிராத்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்