முரளிவிஜய், விராத்கோஹ்லி மீண்டும் சதம்: வலுவான நிலையில் இந்தியா

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (14:58 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று டெல்லியில் ஆரம்பித்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத்கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
 
தொடக்க ஆட்டக்காரர் தவான் மற்றும் புஜாரா ஆகியோர் தலா 23 ரன்களில் விக்கெட்டுக்களை இழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தமிழக வீரர் முரளி விஜய் சதமடித்து அசத்தினார். அவருடன் விளையாடி விராத்கோஹ்லியும் 113 பந்துகளில் சதமடித்தார். விராத்கோஹ்லி மற்றும் முரளிவிஜய் கடந்த டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சற்றுமுன் வரை இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவித்தால் இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்