ஜனவரிக்கு பிறகு எல்லாம் தெரிய வரும்! – உண்மையை உடைத்த தோனி!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (13:12 IST)
தனது கிரிக்கெட் பயணம் குறித்த சில தகவல்கள் ஜனவரிக்கு பிறகே தெரியவரும் என தோனி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட தோனி தனது திருமண வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது அவர் “திருமணமாகும் வரை எல்லா ஆண்களும் சிங்கம்தான். ஆனால் திருமணத்துக்கு பிறகு எல்லாம் மாறிவிடும்” என கூறியுள்ளார்.

மீண்டும் இந்திய அணியில் விளையாடுவீர்களா என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது “ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்” என கூறிவிட்டு நழுவியுள்ளார். இதனால் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த முடிவை ஜனவரியில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்