உற்சாகத்தில் ஆழ்ந்த மாரடோனா; ஓடி வந்து சிகிச்சை அளித்த மருத்துவ குழு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (14:45 IST)
நைஜிரியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அர்ஜெண்டினா அணி கோல் அடித்தபோது ஓவராக உற்சாகமடைந்த மாரடோனாவுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது.

 
அர்ஜெண்டினா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனா ரஷ்யா சென்று நேரில் போட்டிகளை கண்டு வருகிறார். நேற்றைய போட்டியில் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. 
 
மெஸ்ஸி முதல் கோல் அடித்தபோது மாரடோனா எழுந்து நின்று தனது தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். பின்னர் மார்க்ஸ் ரோஜோ இரண்டாவது கோல் அடித்தபோது உச்சக்கட்ட உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவரது உடல் லேசாக பாதித்தது. உடனே மருத்துவக் குழு ஓடி வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
 
இதனிடையே அவர் குட்டி தூக்கமும் போட்டார். நேற்றைய போட்டியை முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா பயங்கரமாக ரசித்தார். அர்ஜெண்டினா அணிக்காக தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்