செஞ்சுரி அடித்து அசராமல் விளையாடும் கேப்டன் கோஹ்லி

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (22:07 IST)
இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது.
 
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளிவிஜய் 20 ரன்களிலும், தவான் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். எனவே 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தத்தளித்த நிலையில் கேப்டன் கோஹ்லி களமிறங்கினார். அவர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்து சற்றுமுன் சதம் போட்டார். தற்போது அவர் 188 பந்துகளில் 122 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
 
ஆனால் அவருக்கு உறுதுணையாக பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. ரஹானே, தினேஷ் கார்த்திக், ஆகியோர் அடுத்தடுத்த ஆட்டமிழக்க சற்றுமுன் வரை இந்திய அணி 68.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 237 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு  விக்கெட் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் இந்தியா 50 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்