மெல்போர்ன் டெஸ்ட் – சில சாதனைத் துளிகள்

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (08:17 IST)
வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன் டெஸ்ட் வெற்றியின் இந்திய அணியும் வீரர்களும் சில சாதனைகளை நிகழத்தியுள்ளனர்.

இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இஷாந்த் ஷர்மா(267) 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு முன்பாக அனில் கும்ப்ளே(617), கபில் தேவ்(434), ஹர்பஜன்(411), அஸ்வின்(367), ஜாகீர் கான்(311) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

வெளிநாடுகளில் அதிக வெற்றியைப் பெற்ற கேப்டன் வரிசையில் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். வெளிநாடுகளில் இதுவரை 11 வெற்றிகளை பெற்றுள்ள அவர் முன்னால் கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்திய அணியின் ரிஷப் பாண்ட் அதிக வீரர்களை கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்த சாதனையை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாட்டினுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டில் அவர் 42 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

அதிக விக்கெட் வீழத்திய அறிமுக பவுலர்கள் பட்டியலில் பூம்ரா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த் ஆண்டில் 48 விகெட்களை அவர் வீழ்த்தியுள்ளார். அவருக்கு முன்னால் ஆலடர் மேன் (54), அம்புரோஸ்(49) வீழ்த்தி முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்