டி 20 போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (17:23 IST)
உள்ளூர் போட்டி ஒன்றில் இந்திய வீரர் சுபோத் போதி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

டி 20 போட்டிகள் இப்போது ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த விளையாட்டு வடிவமாகியுள்ளன. இந்த வடிவத்தின் மூலம் பேட்ஸ்மேன்களின் கை ஓங்கி பவுவலர்கள்  மட்டம் தட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை மறுக்க முடியாத அளவுக்கு மைதானங்கள் சிறியதாக ஆக்கப்பட்டு சிக்ஸ்ர்களும் பவுண்டரிகளும் பறக்கும் விதமாக வடிவமைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இரண்டு கிளப்களுக்கு இடையே நடந்த ஒரு போட்டியில் சுபோத் போதி என்ற இளம் வீரர் முதல் முதலாக டி 20 போட்டிகளில் இரட்டை சதம் அடித்து கலக்கியுள்ளார். அவர் இந்த சாதனையை 79 பந்துகளில் 205 ரன்கள் சேர்த்து நிகழ்த்தியுள்ளார். அவரின் இன்னிங்ஸில் 17 சிக்ஸர்கள் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்