இந்தியா அபார வெற்றி! சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய தீவு

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (04:02 IST)
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



 


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 310 ரன்கள் குவித்தது. ரஹானே 103 ரன்களும், தவான் 63 ரன்களும், கேப்டன் விராத் கோஹ்லி 87 ரன்களும் குவித்தனர்.

311 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது இறுதியில் 43 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரஹானே ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

முன்னதாக மழை காரணமாக இந்த போட்டி 43 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
அடுத்த கட்டுரையில்