டாஸ் வென்ற இந்தியா.. ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்த நியூசிலாந்து..!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (14:28 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 
 
இதனை அடுத்து நியூசிலாந்து அணி சற்றுமுன் வேட்டிங்கில் களமிறங்கிய நிலையில் நான்காவது ஓவரிலேயே கான்வே தனது விக்கெட் இழந்தார்.
 
 தற்போது நியூசிலாந்து அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது. 
 
புள்ளி பட்டியலை பொறுத்தவரை நியூஸிலாந்து, இந்தியா ஆகிய இரண்டு அணிகளுமே இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதல் இடத்தை பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்