மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

Mahendran

வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (19:53 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இன்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக, இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வின் அபார சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், வங்கதேச அணி பும்ராவின் பந்துவீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் 149 ரன்களில் சுருண்டது. இதனால், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் சொதப்பிய நிலையில், சுப்மன் கில் மட்டுமே நிலைத்து ஆடி வருகிறார். அவர் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார், மேலும் அவருக்கு இணையாக ரிஷப் பண்ட் களத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது, மேலும் இந்திய அணி மொத்தம் 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்