வழக்கம் போல் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; 3 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (19:06 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தொடங்கியுள்ளது.
 
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முன்னரே வெளியேறினர்.
 
இதையடுத்து களமிறங்கிய புஜாரா 14 ரன்களின் வெளியேறினார். தற்போது இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியும், துணை கேப்டன் ரஹானேவும் விளையாடி வருகின்றனர்.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இங்கிலாந்து அணியை பலமாக மாற்றிய கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்