நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்ததால் தரவரிசையில் முதலிடம்: இந்தியா சாதனை!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (07:49 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மிகவும் வலுவான அணிகளில் ஒன்றான நியூசிலாந்து அணியை ஒரு போட்டியில் கூட வெல்ல வைக்காமல் ஒயிட் வாஷ் செய்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுவதுமாக வென்றதை அடுத்து இந்தியா 114 புள்ளிகளுடன் ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ள நிலையில் தொடர் தோல்வி காரணமாக நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்