இன்றைய ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஆகிய இருவரும் சதம் அடித்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அடுத்த அரை சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்து, நியூசிலாந்திற்கு 386 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில், கான்வே 138 ரன் களும், நிகோலஸ் 42 ரன் களும், சான்டர் 34 ரன் களும் அடித்தனர்.
இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் தாகூர், யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.