ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு… சலுகையை அறிவித்த ஹாட்ஸ்டார்!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (17:07 IST)
ஐபிஎல் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்ப உள்ள ஹாட்ஸ்டார் நிறுவனம் சலுகையை அறிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்த காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. இப்போது மொபைல் போன்களில் லைவ்வாக பார்க்கும் காலம். இந்நிலையில் இந்திய ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இன்று மாலை முதல் தொடங்க உள்ளது.

இதை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன் கிளை நிறுவனமான ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இப்போது சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது ஹாட்ஸ்டார். ஒரு வருடத்துக்கான VIP சந்தா தொகையை செலுத்தினால் ஒரு மாதம் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்