95% மழைக்கு வாய்ப்பு: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:00 IST)
95% மழைக்கு வாய்ப்பு: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டி வரும் 13ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது 
 
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் அன்றைய தினம் மோத உள்ளன 
 
இந்த நிலையில் மெல்போர்ன் நகரில் 13-ஆம் தேதி 95% மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அன்றைய தினம் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் ரிசர்வ் தினமான நவம்பர் 14 ஆம் தேதி போட்டி நடக்கும் என்று கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் நவம்பர் 14ம் தேதியும் மழையால் போட்டி நடக்காமல் இறுதிப்போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் இறுதிப் போட்டிக்காக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வைத்துள்ள நிலையில் மழை வரும் என்று அறிவிப்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்