இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:02 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை வென்று நாடு திரும்பியுள்ளது. அதையடுத்து அடுத்த மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கான இங்கிலாந்து அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி :- ஜோ ரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

சமீபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தற்போது நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸ் மற்றும் முக்கிய பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெறாத நிலையில் இந்திய தொடரில் அவர்கள் இடம்பெற்றது இங்கிலாந்து அணிக்கு பலத்தைக் கொடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்