நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை மகளிர் அணி 20 ஓவர் களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது