சிக்ஸரில் இரட்டை சதம்: தோனி அசத்தல்!!

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (12:34 IST)
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். 


 
 
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 
 
மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், புள்ளிகளில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நடந்த முடிந்த மூன்றாவது போட்டியில், இந்திய அணி வெற்றி பெருவதற்கு தோனி ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
 
இந்த போட்டியில் தோனி தனது 200 வது சிக்ஸரை அடித்து சாதனை புரிந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 200 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 
 
மேலும், இந்த போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 
அடுத்த கட்டுரையில்