பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு யுவ்ராஜ் சிங் ரூ. 50 லட்சம் உதவி !

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:06 IST)
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருள்ளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், கொரோனா தடுப்பு நிதியாக பலரும் உதவி செய்து வருகின்றனர்.

ஏற்கனே,டாட்டா  நிறுவனம், விப்ரோ நிறுவன, கோடெக் மகெந்திரா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, நடிகர் அக்‌ஷ்ய்குமார் ஆகியோர்  பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட படி தாராளமான உதவி செய்துள்ளனர். மற்ற நடிகர்கள்,நட்சத்திரங்கள் பலரும் உதவி செய்துவருகின்றனர்.

இன்று, பிரபல் கிரிக்கெட் வீரர், யுவராஜ் சிங், கொரோனா நிவாரண நிதியாக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளார்.

இவர் சில வருடங்களுக்கு முன்னர் கேன்சரில் இருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்