சேத்தன் சர்மா ராஜினாமா எதிரொலி: பிசிசிஐ தேர்வுக்குழுவின் இடைக்காலத் தலைவர் இவரா?

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (17:42 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்து விட்டதை அடுத்து தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்