நேரலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்குக் கொலை மிரட்டல்! பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:19 IST)
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் கல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது அவர் காளிக்கு முன்னர் மெழுகுவர்த்தியை ஏற்றினார். இந்நிலையில் இது சம்மந்தமாக வங்காளதேசத்தைச் சேர்ந்த மொஹ்சீன் என்ற இளைஞர் தனது பேஸ்புக் நேரலையில் அரிவாளுடன் தோன்றி ஷகிப் அல் ஹசனை வெட்டுவதற்காக டாக்கா செல்ல உள்ளேன்’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து ஷகிப் அல் ஹசன் தனது செயலுக்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தான் ஒரு பெருமை மிகு இஸ்லாமியன் எனக் கூறினார். அதன் பின்னர் மீண்டும் நேரலையில் வந்த மொஹ்சின் தனது நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டார். ஆனாலும் மிரட்டல் வீடியோ போலிஸாரின் கவனத்துக்கு செல்ல அவர்கள் சைபர் குற்றவியல் பிரிவுக்கு வீடியோவை அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோ மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்