தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. முதலில் இரட்டை இலக்கங்களிலும், அதன்பின்னர் மூன்று இலக்கங்களிலும், இருந்த தினசரி கொரோனா பாதிப்பு அதன் பின்னர் 5 ஆயிரத்தை தாண்டி ஒரு கட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கியது. தற்போது தினமும் 2 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்புக்களே உள்ளன என்பதும் பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக முதல் முறையாக தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 2,228 பேர்களும் குணமாகி வீடு திரும்பி திரும்பி விட்டனர் என்பதும் நேற்று இம்மாவட்டத்தில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது