சென்னை ஒருநாள் போட்டி: இந்தியா போராடி தோல்வி..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (22:10 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 269 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 270 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்