விராட் கோலிக்கு முடி வெட்டி விடும் அனுஷ்கா சர்மா ... வைரல் வீடியோ

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (21:08 IST)
விராட் கோலிக்கு முடி வெட்டி விடும் அனுஷ்கா சர்மா ... வைரல் வீடியோ 

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 743 ல் இருந்து 748 ஆக அதிகரித்துள்ளது.  இதில், 66 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமலில் உள்ளது. அதனால் மக்கள் அவரவர் வீடுகளில் உள்ளனர்.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் கோலிக்கு,அவரது மனைவியும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா முடி வெட்டிவிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்தப் பதிவில், கிச்சன் கத்திரியால் எனக்கு அற்புதமாக வெட்டி விடுகிறார் என கோலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்