23 வருஷத்துக்கு முன் பார்த்திபன் கொடுத்த கடனை திருப்பி கொடுத்த மும்தாஜ் - நெகிழ்ச்சி பதிவு!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (09:16 IST)
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் 23 வருடத்திற்கு முன்னர் நடிகை மும்தாஜிற்கு செய்த பண உதவியை சமீபத்தில் மும்தாஜ் திருப்பி கொடுத்திருக்கிறார். 
 
அதுகுறித்து பார்த்திபன் இட்ட பதிவு இதோ: 
 
நண்பர் ரியாஸ்”actress மும்தாஜ் உங்களை meet பண்ண time கேக்குறார்”
நான்”என்ன விஷயம்னு கேளுங்க”
அவர்”உங்ககிட்டதான் சொல்லனுமாம்”
பர்தாவுக்குள் மிக பாந்தமாக வணங்கி
”23 வருஷத்துக்கு முன்னால எனக்கு நீங்க செஞ்ச உதவி ஞாபகமிருக்கா!” இல்லையானேன்.
“ரொம்ப அவசியமான நேரத்தில …
என்ன ஏதுன்னு கேக்காம,எதையும் எதிர்பாக்காம 15000 ரூபா கொடுத்துதவினீங்க.அதை இப்ப திருப்பி கொடுத்’துட்டு’ போலாம்னு வந்தேன்”
 
அதிர்ந்தேன். ‘துட்டு’ போனா வராது-உயிர் போனாலும்!!! போனா வராத உயிரைப்போல.
என் பள்ளி ஆ’சிரியர்’ உட்பட திரும்ப கொடுக்க மனம் வராமல், எப்படியாவது காலங்கடத்தி ஏமாற்றிவிட,காலண் தன்னை கடத்தினாலாவது
(மிக சமீபமாக நெடுஞ்சோழ நண்பர்,ஒரு துணை நடிகை இப்படிப் பலர்)ஏமாற்றிவிடலாமா? என காத்திருக்கின்றனர்.காலம் இப்படி கெட்டுக் கிடக்கையில்,என் நினைவு கிடங்கில் இல்லாத ஓருதவி நன்றியுடன் திரும்பி வந்த heart attack-கில்
அவரை அதிசயமாய் பார்த்தேன்”செஞ்ச நல்லதையே
மறந்திட்ட நீங்க எவ்வளவு பெரிய நல்லவர்”எனக் கூறிவிட்டு அமைதி தழும்ப வெளியேறினார். 
 
வெளிறிப்போன முகத்தோடு என் மகள் உட்பட டஜன் பேருக்காவது நடந்ததைச் சொல்லி மும்தாஜின் நன்றி குணத்திற்கே ஒரு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
கற்றது:பிரதிபலன் நோக்காமல் இயன்றதை செய்தல்
மற்றது:செய்த உதவியை நோகாமல் மறந்துவிடல்.
 
இதற்கு பதிலளித்த மும்தாஜ்:‘
 
நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி. பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவோ நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன். அல்லா அஹ்மதுல்லாஹ் எனது நாளை முடிவடையும் முன் எனக்கு இதை நினைவூட்டினார்.
 
இதற்கு பதிலளித்த பார்த்திபன்:
 
திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் ‘நாளை’ என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்தால் யாவும் … ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை/தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்! தினமும் ஒரு நல்ல காரியம் செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன்.அதையெல்லாம் நான் வெளியில் சொல்வதில்லை. அவையாவும் என் அகத்தின் vacuum cleaner. பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல. அப்படியிருக்க இதை வெளிபடுத்த காரணம் இதில் நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!!! என பதிவிட்டிள்ளார் பார்த்திபன். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்