பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்....?

Webdunia
கனவில் வரும் பாம்பு உங்களை கடிப்பதன் மூலம், அல்லது கொத்துவதன் மூலம், அல்லது விழுங்குவதன் மூலம், அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்களை  அழிக்க முற்பட்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தடுத்து, வாழ்க்கையின் நல்ல விடயங்கள் போவதற்கான ஒரு அழைப்பாக அதனை கருதலாம். 

பலன்கள்:
 
ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
 
இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
 
பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
 
பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
 
பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
 
காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
 
பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
 
கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்