பிரதான தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாடு !!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (09:35 IST)
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும்.


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது

சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட சனிதோஷங்கள் முற்றிலும் நீங்கும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட சனிபகவான் தன் அருள்பார்வையைக் காட்டியருள்வார்.

பிரதோஷ காலத்தில் முறைப்படி சிவபெருமானையும் நந்திதேவரையும் ஒருங்கே தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். அமைதி, ஆனந்தம் வாய்க்கும் முக்தி கிடைக்கும்.

பிரதோஷ காலத்தில் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், பன்னிரு திருமுறைகள், தேவாரம் திருவாசகப் பாடல் கள் பாடி வழிநட ஈசனருள் பூரணமாக கிட்டும். அவனருளாலே ஆனந்தம் பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்