பெற்ற தாய்க்கும், பிறந்த மண்ணுக்கும் முதல் மரியாதை தருபவர்களே! உங்களுடைய ராசிநாதனான சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சோர்ந்துவிடாமல் முயன்றுக் கொண்டேயிருப்பீர்கள். நல்லவர்களின் நட்புக் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், மாற்றுமொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்து வந்த தடைகளெல்லாம் நீங்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
9-ந் தேதி வரை குரு 10-ல் தொடர்வதால் செலவினங்கள் கூடிக் கொண்டேப் போகும். எதிர்பார்த்த தொகை கொஞ்சம் தாமதமாகத் தான் கிடைக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வழக்குகளை சந்திக்க நேரிடுமோ இப்படியே பிரச்னையிலேயே சிக்கிக் கிடப்போமோ என்றெல்லாம் மனக்குழப்பம் வந்துப் போகும். 10-ந் தேதி முதல் குரு 9-ம் இடத்தில் அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட யோகமெல்லாம் உண்டாகும். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பணவரவு அதிகரிக்கும்.
எதிர்பார்த்த பெரிய தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் ஏதேனும் பணம் வர வாய்ப்பிருக்கிறது. அடகிலிருந்த நகை, பத்திரத்தை மீட்க வழி, வகைப் பிறக்கும். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். ராகு, கேது சாதகமாக இல்லாததால் அடிமனதில் ஒருவித பயம் இருந்துக் கொண்டேயிருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். சின்ன சின்ன காரியங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும்.
கன்னிப் பெண்களே! நண்பர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். தன் கையே தனக்குதவி என்பதை அறிந்துக் கொள்வீர்கள். சிலருக்கு வேலைக் கிடைக்கும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். பங்குதாரர்கள் அதிருப்தி அடைவார்கள்.
உங்களுடைய புதிய திட்டங்களை முதலில் அவர்கள் ஏற்க மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளில் ஒருவர் உங்களை எதிர்த்தாலும் மற்றொருவர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். ஒருசிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் ஓரளவு வெற்றியடையும். தன் பலம் பலவீனங்களை திருத்திக் கொள்ளும் மாதமிது.