ஆடி மாதத்தில் அம்பாள் வழிபாட்டை எவ்வாறு செய்யவேண்டும்...?

Webdunia
ஆடி மாதக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆடி மாதம் தொடங்கிய உடன் காற்றும் அதிகமாக வீசத் தொடங்கிவிடும். 

காற்றின் மூலம் எந்த நோய் நொடியும் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக வேப்பிலையை ஆடி மாதத்தில் வீட்டு வாசலில் வைத்து வழிபாடு செய்தார்கள்.  இதேபோல் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு செய்தால் மாறி மழை பெய்யும் என்பதும் நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது.
 
குறிப்பாக ஆடி மாதத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தின் நலனுக்காக, தங்களுடைய குடும்பம் நோய் நொடி இல்லாமல், ஆரோக்கியமாக செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக அம்பாள் வழிபாட்டை மேற்கொள்வார்கள்.

அவரவர் வீட்டு வழக்கப்படி ஆடிமாத வழிபாட்டினை  மேற்கொண்டாலும், தினமும் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அம்மனை நினைத்து மந்திரங்கlai உச்சாடனம் செய்யலாம்.
 
இதோடு மட்டுமல்லாமல் இந்த ஆடி மாதம் அம்பாள், மக்களின் நலனிற்காக தவமிருந்த காலமாகவும் சில சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவேதான்  அம்மனின் மனதை குளிர வைக்க கூழ் காட்சி அம்பாளுக்கு நிவேதனமாக படைப்பார்கள். இப்படி ஆடி மாதத்தில் அம்மனுக்காக பல சிறப்புகளை நாம் சொல்லிக்  கொண்டே செல்லலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்