வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும் வெண்கடுகு தூபம் !!

வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் இருக்கும் பொழுது இது போல் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கப் பெறும். சிறிதளவு வெண்கடுகை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வீட்டின் அனைத்து திசைகளிலும் தூவி விடுங்கள். 

ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து அதனை பெருக்கி ஒரு துணியில் முடிந்து முச்சந்தியில் போட்டு விடலாம். இப்படி  செய்வதால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு அடுத்தடுத்து நடைபெறுவதை நீங்களே உணரலாம்.
 
வெண்கடுகு தூபம் போடுவதும் இதனால் தான். விசேஷ தினங்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது வீடு முழுவதும் வெண்கடுகு  கொண்டு தூபம் போடலாம். தூப சாம்பிராணியுடன், வெண் கடுகு சேர்த்து, சிறிதளவு குங்குலியம், ஏலக்காயையும் போட்டால் வீடு முழுவதும் கமகமவென்று  தெய்வீக மணம் கமழும். 
 
வீட்டில் இருக்கும் அத்தனை தரித்திரமும் நீங்கி நல்ல சக்திகள் மூலம் நன்மைகள் நிறைய நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள்.
 
கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருந்தால் இது போல் வாரம் ஒரு முறை தூபம் போட்டு பாருங்கள். பிரச்சினைகள் எல்லாம் நொடியில் காணாமல் போய்விடும்.  வீட்டில் இந்த தூபம் போட்டு வந்தால் சுபகாரிய தடைகளும் விலகும் என்பது ஐதீகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்