வைகாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது தெரியுமா...?

Webdunia
தமிழ் கடவுள் முருகன் அவதார தினம் கொண்டாடப்படுவது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர நாளில்தான். நிறைந்த பௌர்ணமி நாளில் முருகன் கோவில்களில்  பால்குடங்களை எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். 

வைகாசியில்தான் வியாசர் தங்கத்தட்டில் அவதரித்தார். இந்த மாதத்தில்தான் நம்மாழ்வார், சேக்கிழார், திருஞான சம்பந்தர், காஞ்சி மகா பெரியவர் ஆகிய மகான்களின் அவதாரம் நிகழ்ந்துள்ளது. புத்தர் அவதரித்தது வைகாசி பௌர்ணமியில்தான்.
 
தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது திரயோதசி, பெளர்ணமி நாளில்தான். 
 
வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு எண்ணற்ற பலன் கிட்டும்  என்பது ஐதீகம். முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்