கருடனை வழிபட உகந்த கிழமையும் பலன்களும் !!

பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது. பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை  கருடாழ்வார் என அழைப்பர். இறை தரிசனத்தைப்போலவே கருட தரிசனமும் மிக நல்லது. 

அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். 
 
கருட பஞ்சமி நாளில் குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும், கருடனுக்கு உகந்த மந்திரங்களை துதித்து வணங்குவது சிறப்பை தரும். அதன்பின் பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோவிலை வலம் வந்து வீடு திரும்பலாம்.
 
கருடனை தரிசிப்பது சுப சகுனம் ஆகும். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி என்று கூறுவர்.கும்பாபிஷேகத்தின்போது  பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது.
 
அடிக்கடி பாம்பு எதிர்ப்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கருட பஞ்சமி விரதத்தை மேற்கொள்ளலாம். ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும்.
 
ஏழரை சனி, கண்ட சனி போன்ற கோச்சார சனி நடப்பவர்கள் கருட பஞ்சமியன்று வணங்கி வழிபட தோஷங்கள் நீங்கும். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்