ஷட்திலா ஏகாதசி தினத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா...?

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (13:42 IST)
ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருப்பதுதான் ஏகாதசி.


அமாவாசை, பௌர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.

மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்கள் முக்தியடைய வழி செய்வார்கள்.

'ஷட்" என்றால் ஆறு, 'திலா" என்றால் எள். ஆறுவகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்துவது ஷட்திலா ஏகாதசி. ஒரு அற்புதமான நாளாக 'ஷட்திலா ஏகாதசி" விளங்குகிறது.

இந்த நாளில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால், முன் செய்த பாவங்கள் நீங்கி காலமெல்லாம் பசிப்பிணி இல்லாத வாழ்வைப் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்