பைரவருக்கு உகந்த வழிபாடுகளும் நன்மைகளும் !!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:42 IST)
பைரவர் வழிபாடு பயம் போக்கும். பைரவர் வழிபாடு திருமணம் யோகம் தரும். வெள்ளிக்கிழமை, ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.


குழந்தைபாக்கியம் பெற, தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக் கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இழந்த பொருள் - சொத்துகளைத் திரும்பப் பெற, பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.

வறுமை நீங்க. வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் வறுமை அகலும்.

நோய்கள் தீர, யமபயம் நீங்க. ஞாயிற்று கிழமை ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடை பெறும் வழிபா டுகளில் கலந்துகொண்டு, பைரவரு க்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து எலுமிச் சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நோய்கள் மறையும். யம பயம் நீங்கும்.

சனி தோஷம் நீங்க. சனிக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டா ல், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்