தீபம் ஏற்றவேண்டிய திசைகளும் பலன்களும் !!

Webdunia
வீட்டில் நாம் எந்தவொரு பூஜையைச் செய்யத் தொடங்கும்போதும், முதலில் சுமங்கலியான ஒருவரை குத்துவிளக்கு ஏற்றிச் சொல்லி, அதை வணங்கிய பிறகே  தொடங்க வேண்டும்.

தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றிய பிறகே பஞ்சுத் திரியை வைக்க வேண்டும்.
 
விளக்கில் எண்ணெய் விட்ட பிறகு, எத்தனை திரிகளை வைத்தாலும், அனைத்து திரிகளையும் ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் விளக்கில் இரண்டு திரிகளாவது போட்டு ஏற்றுவது நல்லது.
 
இரண்டு திரிகளின் நுனிகளை இணைத்து, அதை நன்றாக முறுக்கி தீபமேற்றுவது உன்னதமான வாழ்வுக்கு அடித்தளமிடும்.
 
கிழக்கு திசையை நோக்கித் திரி ஏற்றினால், பலன்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும்.
 
தீபம் ஏற்றவேண்டிய திசைகள்:
 
கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் கிரக தோஷம் ஏற்படாது. வீட்டில் உள்ள சோதனைகள் மற்றும் துன்பங்கள் யாவும் படிப்படியாக குறைய தொடங்கும்.
 
மேற்கு திசையில் விளக்கேற்றினால் சனிப்பீடை, கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். பங்காளி பகை, சண்டை, சச்சரவு, கிரகங்களின் தோஷம்  நிவர்த்தியாகும்.
 
வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் கல்வியில் தடை விலகும், செல்வம் பெருகும், திருமண தடை நீங்கள், வியாபாரத்தில் லாபம் பெருகும். தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதை தவிர்த்திட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்