சோமவார பிரதோஷ வழிபாட்டின் சிறப்புக்கள் !!

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம்.


சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சோமவார பிரதோஷ நாளில் (இன்று) சிவ தரிசனம் செய்யலாம்.
 
சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை  தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும். 
 
மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். பிரசாதம் பெற்று விரதத்தை  முடிக்கலாம்.
 
அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். 
 
கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன்  மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.
 
பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து  பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய்  விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்