டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - சிம்மம்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (20:10 IST)
மனித நேயம் மிக்க நீங்கள் தன்னை நம்பி வந்தவர்களை கைவிடமாட்டீர்கள். குருவும், புதனும் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.

குடும்ப வருமானம் உயரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். பிள்ளை பாக்யம் உண்டு. மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து உங்கள் ரசனைக் கேற்ற வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பிதுர் ராஜ்ய சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

15-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சூரியன் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் தடைகளெல்லாம் நீங்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடிவடையும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். ஆனால் 15-ந் தேதி வரை சூரியன் சனியுடன் இணைந்திருப்பதால் நெஞ்சு வலி, தலைச் சுற்றல், உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையெல்லாம் வந்து நீங்கும்.

4-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் அலைச்சலும், செலவினங்களும் அதிகமாகும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. வீட்டில் குடி நீர் மற்றும் கழிவு நீர் குழாய் அடைப்பு, பழுது வந்து நீங்கும். பெரிய பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் குடிநீரை காய்ச்சி அருந்துங்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவதை பார்த்து சக ஊழியர்களும் உங்களை மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அனுபவ அறிவை பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்தும் மாதமிது.
அடுத்த கட்டுரையில்